இன்று ஐ.தே.க.வில் இணைகிறார் பொன்சேகா
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக் கொள்ளவுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் சரத் பொன்சேகா, ஐ.தே.கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி குறித்த நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
சரத் பொன்சேகா, ஐ.தே.கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், அவரது ஜனநாயகக் கட்சி கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த தகவலை மறுத்த சரத் பொன்சேகா, தமது கட்சியில் இருந்தவாறு வேறொரு கட்சியில் அங்கத்துவம் வகிக் யாப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.