வட மாகாண முதலமைச்சருக்கு இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை-ஆளுனர்
வட மாகாண முதலமைச்சருக்கும் தனக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் வடமாகாண முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த அரசாங்கமானது நாட்டின் நீதித்துறை உட்பட சகல துறைகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கமானது வடக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக வடக்கில் நல்லாட்சியினை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.