Breaking News

ஜனநாயகக் கட்சியின் நிலை? அறிவிப்பு மிக விரைவில்



பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது ஜனநாயகக் கட்சியைக் கலைப்பதா? இல்லையா என்பது குறித்து அடுத்து வரும் நாட்களில் அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் ஸ்தாபகரான அமைச்சர் சரத்பொன்சேகா எதிர்வரும் 30 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவம் பெறவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சிக்கு 5,238 வாக்குகள் கிடைத்தன.

கம்பகா மாவட்டத்தில் 4,706 வாக்குகளை மட்டுமே ஜனநாயகக் கட்சி பெற்றது. கொழும்பில் பொன்சேகாவும் கம்பகாவில் மனைவி அனோமா பொன்சேகாவும் போட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.