”நான் அரசியல் வாதியல்ல“ - ஒப்புக்கொண்டார் கோட்டாபய
நான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மட்டுமே. மாறாக, ஒர் அரசியல்வாதி அல்லவென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகிக்குமாறு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போதே கோட்டாபய இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
அது யாரோ ஒருவர் விடுத்த அறிவிப்பு மாத்திரமேயாகும். நான் அரசியல் வாதியல்ல. மாறாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மட்டுமே ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில், அவரது வாகன தொடரணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட, தற்கொலை தாக்குதல் தொடர்பான வழங்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்