பரணகம ஆணைக்குழுவுக்கு இன்னும் ஒரு மாதம்
யுத்த காலத்தில் காணமல் போனவர்கள் தொடர்பில் ஆராய தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எத்ரிவரும் ஜூலை 15 ஆம் திகதி கலைக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வேல் பரணகம தெரிவித்துள்ளார்.
காணமல் போனவர்கள் தொடர்பில் ஆராய புதிய அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அறிக்கை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனவும் அதன் பின்னர் ஆணைக்குழு கலைக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வேல் பரணகம மேலும் தெரிவித்தார்.