Breaking News

“நாடு கடந்த தமிழீழ அரசிற்கு– ஐ.நா. அங்கீகாரம்“


நாட்டுக்கு வெளியில் தமிழீழ அரசாங்கம் எனும்
பெயரிலான தமிழீழ அரசை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அரசியல் காரியாலயம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வீ. உருத்திரகுமாரன் அவர்கள் தலைமையில் இயங்கும் “நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்” எனும் அமைப்பின் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் முருகைய்யா சுஹிந்தன் எனும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுஹிந்தன் ஏற்பாடு செய்த இலங்கைக்கு எதிரான ஹைப்ரிட் நீதிமன்றம் அமைக்கும் விசேட கூட்டமொனெ்று நேற்று (22) நண்பகல் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 4 ஆவது இலக்க அறையில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் சர்வதேச சட்டத்தரணிகள் ஆறுபேர் கலந்துகொண்டுள்ளதுடன், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இராணுவ யுத்த மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் தேவை என்ற தீர்மானத்தையும் எடுத்துள்ளனர்.

இந்த நாட்டுக்கு வெளியில் தமிழீழ அரசாங்கம் எனும் அமைப்பை ஐ.நா. வில் அங்கீகரிப்பதற்கு முன்னர் ஐ.நா. வின் ஜெனீவா அரசியல் காரியாலயமும் அதன் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கை அரசாங்கத்தை கலந்தாலோசிக்க வில்லையெனவும் இன்றைய சிங்கள தேசிய நாளிதழ் ஒன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய காணொளிகள்












இதேவேளை ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்களை குழுவே Monitoring Accountability Panel (MAP) க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சர்வதேச நீதிபதியாகவும், விசாரணை மற்றும் மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற ஜெப்றி ரொபர்ட்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த உப மாநட்டில், கம்போடியாவின் கலப்பு தீர்பாயத்தின் பொறிமுறையில் நீதிமன்றகளின் சிறப்பு விசாரணை மன்றங்களில் பொதுச் சமுதாய நீதி முன்முயற்சிக்கான ஆலோசகராக இருக்கின்ற ஹீதர் ரியான் அவர்களும் பங்கெடுத்திருந்தார்.
சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29ம் நாளன்று மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் சபையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்த பன்னாட்டு நிபுணர் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
ஐ.நா மனித உரிமைச்சபைக்கு சிறிலங்கா வழங்கியிருந்த நீதிவழங்யிருந்த வாக்குறுதிகளில் காத்திரமான எதனையும் சிறிலங்கா செய்யவில்லை என குற்றஞ்சாட்டியிருந்த இந்த நிபுணர் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது அனைத்துலக நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பெற முடியும் எனவும் தெரிவித்திருந்தது.