இலங்கையின் மோசமான முன்னுதாரணம் – டியூ குணசேகர குற்றச்சாட்டு
பொது நிதியைச் செலவிட்டு, பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்புக்கு பரப்புரை செய்வதற்காக பிரதிநிதிகளை அனுப்புவதற்கு அரசாங்கத்துக்கு நெறிமுறை உரிமை ஏதும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
பொது நிதியைப் பயன்படுத்தி, பிரித்தானியாவில் நடந்த கருத்து வாக்கெடுப்புத் தொடர்பாக பரப்புரை செய்வதற்கு இரண்டு பிரதிநிதிகளை அனுப்பியிருந்தார் பிரதமர். இது இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையைப் பொறுத்தவரையில் ஒரு மோசமான முன்னுதாரணம்.
இதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கையில் நடக்கும் தேர்தல்களில் பரப்புரை செய்வதற்கு பிரித்தானியர்களுக்கும் நாம் அனுமதி கொடுக்க வேண்டியிருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.