Breaking News

சிறந்த பாடசாலை செயற்திட்டம் வடக்கில் ஆரம்பம்!

நகர்ப்புறப் பாடசாலைகளைப் போன்று கிராமப்புற பாடசாலைகளையும் தரமுயர்த்தும் வகையிலான அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற புதிய செயற்திட்டம் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வு, தென் மற்றும் வட மாகாணங்களில் இன்றைய தினத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. தென் மாகாணத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் குறித்த செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் காணப்படும் பிரபல்ய பாடசாலைகளில் காணப்படும் சமமான வசதிகள் அதாவது பௌதீக, மானிட, உட்கட்டமைப்பு, சிறந்த பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் போன்ற வசதிகள் இத்திட்டத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான வடமாகாணத்திற்கான குறித்த செயற்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.