Breaking News

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர், வடக்கு ஆளுநர் சந்திப்பு!



நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் 'டோரே ஹெடர்ம்'உள்ளிட்ட குழவினர் வட மாகாண ஆளுநர் ரெஜினோட் குரேயை இன்று புதன்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்;துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், ஐவர் அடங்கிய குழவினர் இந்தச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.  வடக்கில் நோர்வே அரசு மேற்கொண்டுவரும் உதவித் திட்டங்கள் தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனை கைடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிற்பகலில், வளலாய் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேறிய மக்களைப் பார்வையிட்டு நோர்வே அரசியின் உதவிகளை நேரடியாக அவர் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.