வவுனியாவில் இளம் கண்டுபிடிப்பாளரிடம் 100 கோடி கப்பம் கேட்டு மிரட்டல்
முன்னாள் ஆயுதக்குழுவொன்றின் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்தியவாகள், 100 கோடி கேட்டு மிரட்டியதாக, வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ஜக்சன் குறிப்பிடுகின்றார்.
தம்மிடம் கப்பம் கோரியமைத் தொடர்பில் இளம் கண்டுபிடிப்பாளர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘வவுனியா நகரில் உள்ள பேரூந்து நிலையத்தில் வைத்து தம்மை வவுனியாவில் பிரபல ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தியவர்கள் உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர்.
அதன் நிமிர்த்தம் அவர்களது அரசியல் செயற்பாட்டுக்காக பணம் கேட்கின்றனர் என எண்ணி எவ்வளவு பணம் தேவை என கேட்டேன். அவர்கள் உடனடியாக 100 கோடி வேண்டும் என்றனர். என்னால் அவ்வளவு பணம் தரமுடியாது என தெரிவித்தபோது அவாகள் தரக்குறைவாக பேசினர்.
மீண்டும் போராட்டத்திற்காக பணம் வேண்டும் என்றனர். எனினும் என்னால் முடியாது. அதற்கு நான் தரமுடியாது என்றேன். மீண்டும் என்னையும் எனது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசினர்’ என தெரிவித்தார்.
இது தொடர்பாக நீங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையா என கேட்டபோது என்னிடம் பணம் கேட்டதற்கான ஆதாரத்தை கேட்பார்கள். என்னிடம் ஆதாரம் இல்லாமையினால் நான் இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. எனினும் நான் நாளை ஓமந்தை பொலிஸில் முறைப்பாடு செய்வேன் என தெரிவித்தார்.