Breaking News

லசந்த கொலை விவகாரம் : பொன்சேக்காவுக்கும் சிக்கல்!



பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு இராணு உயர் அதிகாரிகள் தடையாக இருப்பதாக நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டதோடு, குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, இராணுவ புலனாய்வு பிரிவினரின் நாளாந்த குறிப்புப் புத்தகத்தை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதவான் எம்.சஹாப்தீன், கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய தற்போதை அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவிற்கு கீழ் பணியாற்றிய படை அதிகாரிகள் குறித்த தகவலையும் வழங்குமாறு உத்தரவிட்டார்.