Breaking News

நல்லாட்சியில் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் : விஜயகலா நம்பிக்கை



ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் ஒரு தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க இனுவில் அருணகிரிநாதர் – சிவசுப்ரமணியர் ஆலயத்தின் பிரதான மண்டப திறப்புவிழா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்க தலைவர்களிடம் காணப்பட்ட இனவாதம் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லையென குறிப்பிட்ட விஜயகலா, தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் இருக்கும் இந்த காலகட்டத்தில், அவர் ஊடாக ஒரு தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.