Breaking News

வவுனியா மாவட்டத்தில் உள்ள பௌத்த ஆலயங்களிற்கு சீன அரசின் நிதி

வவுனியா மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட பௌத்த ஆலயங்களிற்கு சீன அரசின் நிதிப் பங்களிப்பில் தலா 5 லட்சம் ரூபா பண உதவி எதிர் வரும் 10ம் திகதி வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பௌத்த ஆலயங்களாக மொத்தம் 29 பௌத்த ஆலயங்கள் உள்ளன. இவற்றின் புனரமைப்பு பணிகளிற்காக உதவுமாறு குறித்த ஆலயங்கள் கடந்த காலங்களில் மாவட்டச் செயலகங்களின் ஊடாக விண்ணப்பித்திருந்தன.

இவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் கண்டி தலதா மாளிகையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த்தது.

மேற்படி வேண்டுகோள்கள் தொடர்பில் கவனம் செலுத்திய தலதா மாளிக்கையினர் இது தொடர்பில் சீன அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தனர்.

இவற்றினைப் பரிசீலித்த சீன அரசு 29 ஆலயங்களில் 21 ஆலயங்களிற்கு தலா 5 லட்சம் ரூபாவீதம் நிதியுதவி புரிவதற்கு முன் வந்துள்ளது.

இதன்பிரகாரம் இவற்றின்கான சிபார்சுகள் மற்றும் ஆலயத்தின் தேவைகள் தொடர்பில் பிரதேச செயலகங்கள் சிபார்சிற்கமைய இவற்றிற்கான நிதி விநியோகம் எதிர் வரும் 10ம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.