பசில் ராஜபக்ச பிணையில் விடுதலை
நிலம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹாவிலுள்ள நிலம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைகளுக்கான அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இவர் பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய 20 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் பசில் ராஜபக்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி -