தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரண்டு தமிழ் வீரர்கள் தெரிவு
இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது.
இந்த அணியில் கிழக்கு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகிய இருவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் சீனாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடவுள்ளனர்.
மேலும், சீனாவிற்கு செல்லவுள்ள இலங்கை அணியின் பயிற்சியாளராக மு.பரணிதாசன், பல்கலைக்கழங்களுக்கு இடையிலான விளையாட்டு சங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.