காணி விடுவிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக மைத்திரி ரணிலுடன் பேச்சு!
காணி விடுவிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் விடயங்களை உடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசும் பொருட்டு வலி. வடக்கில் விடுவிக்கப் பகட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வலி.வடக்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட 201 ஏக்கர் நிலம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் விடுவிக்கப்பட்டதுடன் இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்களிற்கும் அதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சரினால் விடுவிக்கப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்ட இருவரிற்கு காணிக்குப் பதிலாக வீதிகளே விடப்பட்டுள்ளதுடன் விடுவிப்பதாக அரசு உத்தரவாதம் அளித்த இரு வீதிகளும் விடப்படாத தனியார் காணிகளை அபகரித்து புதிதாக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பல பிரச்சணைகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமையினால் அவற்றினை நேரில் பார்வையிட்டு ஆவணமாக்கி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கையளித்து அது தொடர்பில் உரையாடவுள்ளோம்.
இவ்வாறு உரையாடி எமக்கும் எமது மக்களிற்கும் அளித்த வாக்குறு தியின் பிரகாரம் ஏனைய காணிகள் விடுவிப்புத் தொடர்பாகவும் ஓர் சந்திப்பினை மேற்கொள்ள எண்ணியுள்ளோம் . இதற்கான ஏற்பாட்டினை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக மேற்கொண்டு விரைவில் இச்சந்திப்பு இடம்பெறும் என்றார்.