Breaking News

பொன்சேகாவிற்கு அமைப்பாளர் பதவி



ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்று முன்னர் ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமரும், ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சரத் பொன்சேகா ஐ.தே.கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அதன்படி அவர், களனி அமைப்பாளராக நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.