இறுதிப்போரில் க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியாகியது! (படங்கள்)
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ள க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
போரின் பின்னர் வடக்கு பகுதியில் மிதிவெடி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் மிதிவெடி மீட்பு நிறுவனங்களை ஆதாரப்படுத்தி, த கார்டியன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
இறுதி போரின்போது இலங்கை படைகளால் சர்வதேச போர் விதிகளில் தடை செய்யப்பட்டுள்ள க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தமிழ் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆயினும் இலங்கை அரசு அதனை நிராகரித்து வந்த நிலையில், த கார்டியன் க்ளாடர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட பகுதிகளின் வரைப்படம்