Breaking News

அனைவரும் வாக்காளராகப் பதிவு செய்யுங்கள் : வடக்கு முதல்வர்

அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வாக்காளர் தினம் தொடர்பில் முதலமைச்சரிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள் என தெரிவித்த முதலமைச்சர், அவ்வாறு செல்வதற்கு அதிகம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் வடக்கில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது.

வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைந்து செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.