Breaking News

யாழில் அமைதியை சீர்குலைக்க இடமளிக்க முடியாது - இளஞ்செழியன்



யாழ் குடாநாட்டின் அமைதிய சீர்குலைப்பதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்க முடியாதென யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரானிஸ்லாசுக்கு நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ் குடாநாட்டில் தற்போது அமைதியான சூழல் காணப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பல வன்செயல்கள் இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், மதப் பெரியார்கள், புத்தி ஜீவிகள், பொதுமக்களின் வலியுறுத்தல்களுக்கு அமைய அவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தற்போது போதைவஸ்து, கஞ்சா கடத்தல்கள் மிக நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டாலும், ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளன. வாள் வெட்டுக்கள் நிறுத்தப்பட்டு, கொள்ளை களவுகள் குறைவடைந்துள்ளன. மாணவர் குழு மோதல்கள், இளைஞர்கள் வீதிகளில் மோதிக்கொள்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைதியாக இருக்கும் யாழ் குடாநாட்டை சீரழிக்க முயலும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்கக் கூடாது. 

அவ்வாறு சீரழிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை இறுக்கமான சட்ட நடவடிக்கைகளைப் பயன்படுத்தி நிறுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.