Breaking News

நாடு பாரிய கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது ; ஜனாதிபதி

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அறிவு, நுண்ணறிவு மற்றும் வழிகாட்டலை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சட்டத்தரணிகள் சிலருக்கும் இடையே ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

வெளிநாட்டு கடன் சுமையினை நாடு எதிர்நோக்கியுள்ள சவால் மிகுந்த இவ்வேளையில் அனைத்து கருத்து முரண்பாடுகளையும் மறந்து செயற்படுமாறு அவர் கூறியுள்ளார்.

நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்கூடாக பார்க்க முடியாதபோதும் சர்வதேச ரீதியில் பெரு வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை செவிசாய்த்து அனைவரதும் ஒத்துழைப்புடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதி செய்து ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு தம்மாலான உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.