ஆர்ப்பாட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது, கண்ணீப்புகை பிரயோகம்.
கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸார் கண்ணீப்புகை பிரயோகித்ததோடு, தண்ணீரையும் பாய்ச்சியுள்ளனர்.
மாணவியொருவரை பாலியல் ரிதீயில் பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில், களனி பல்லைக்கழகத்தின் எட்டு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,
களனி பல்லைக்கழகத்தின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு தொழிநுட்ப கல்லூரி வீதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொலிஸாரின் அறிவுறுத்தலையும் மீறி ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்டதால், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரை பாய்ச்சவேண்டி ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.