Breaking News

யுத்தில் 40 ஆயிரம்பேர் கொல்லப்படவில்லை : ஐ.நாவில் நிரூபிக்க முடியுமா?.

இலங்கையில் இறுதியுத்தில் 40 ஆயிரம்பேர் கொல்லப்படவில்லை என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பவற்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐ.நாவில் தெரிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் மாவை முன்வைத்துள்ளார்.

எனினும் கடந்த 1988 ஆம் ஆண்டு பின்னர் இடம்பெற்ற கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஸ்ரஈடு வழங்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுத்தி யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில், எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முடிவிற்கு கொண்டுவரப்படவில்லை எனவும், தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இவ்வாறாயினும், இறுதியுத்தத்தில் 40ஆயிரம்பேர் கொல்லப்படவில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.