காணாமல்போனோர் விவகாரம் : இராணுவத்தை விசாரிக்க காலம் இல்லை
காணாமல் போனவர்களின் குடும்பங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் இராணுவத்தினரை விசாரிக்க வேண்டிய தேவை உள்ளபோதிலும், கால அவகாசம் இன்மையால் அவ்வாறான ஒரு விசாரணையை மேற்கொள்ளமுடியாது என காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், யுத்தினால் உறவுகளை இழந்த ஒவ்வொரு குடும்பங்களையும் சரியான முறையில் அரசாங்கம் இனம்கண்டு அவர்களுக்கு ஜந்து இலட்சம் ரூபாய் நஸ்டஈட்டு பணத்தை வழங்கவேண்டும் எனவும் பரணகம வலியுறுத்தியுள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பணியற்றிய சந்தர்ப்பங்களில் தாம் இதனை உணர்ந்துகொண்டதாக சுட்டிக்காட்டினார்.
ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிறைவுசெய்ய எதிர்வரும் ஜீலை மாதம் 15 ஆம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பரணகம, இவ்வாறான குறுகிய காலப்பகுதியில் தம்மால் எந்தவொரு செயற்பாடுகளையும் பூர்த்திசெய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.