சம்பந்தன் நாட்டில் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட வில்லை!
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாணத்தின் அபிவிருத்தியை பற்றி மாத்திரம் அக்கறைகொண்டுள்ளதால், மக்கள் விடுதலை முன்னணி தெற்கின் எதிர்க்கட்சியாக தம்மை வலுப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைபெற்ற சம்பந்தன் நாட்டில் எதிர்க்கட்சி தலைவராக செயற்படாது, வடக்கு மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்திய மாத்திரம் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குறுகியகால வளர்ச்சியானது மக்கள் விடுதலை முன்னணைியின் எதிர்க்கட்சி கனவிற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடுஇ திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் கடற்படை அதிகாரி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரிற்கு இடையில் இடம்பெற்ற பிரச்சினையில் பின்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் எஞ்சியிருந்த கௌரவத்தை நல்லாட்சி அரசாங்கம் பறித்துக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பிர் சுட்டிக்காட்டினார்.