இறுதிப்போரில் 220,000 மக்களுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்(படங்கள்)
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சனத்தொகை
பரம்பல் விகிதம் கடந்த 1981ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மாற்றத்தினை 2012ஆம் ஆண்டு நிலை காட்டுகின்றது.
2007ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 220,117ஆக இருந்த மக்கள் தொகை 2012ஆம் ஆண்டில் 81,263ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் 195,386 ஆக இருந்த மக்கள் தொகை 111,210ஆக குறைந்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடுகளுக்கும் 2012இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டிற்கும் பாரியளவிலான வித்தியாசத்தினை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக இறுதிப்போரில் முழுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரம் இரண்டு இலட்சத்து இருபத்துமூவாயிரத்து முற்பது பொதுமக்களின் நிலை என்னவென்பது கேள்விக்குள்ளாகியுள்ளது?
இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச இறப்புக்கள்,காணாமல் போனமை தவிர கிளி,முல்லை மாவட்டங்களில் மாத்திரம் 223,030 எண்ணிக்கையான மக்களுக்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதை நல்லாட்சி அரசோ அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள த.தே.கூட்டமைப்போ இதுவரை வாய்திறக்கவில்லை.
ஐ.நா அறிக்கையின்படி நாற்பதாயிரம் என்றும் ஒரு இலட்சம் என்றும் சொல்லப்பட்டுவந்த தொகை தற்போது இரண்டு இலட்சத்திற்கு மேலாக காணப்படுகின்றது.
1981இலிருந்து 2012 வரை வடக்கு கிழக்கில் தமிழ்,சிங்கள இனங்களின் பரம்பல் விகிதமும் வாசகர்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.


