கொலம்பிய ஹெலி விபத்து – 17 பேர் பலி
கொலம்பியாவின் தலைநகரான Bogota-வின் வடமேற்கு பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொலம்பியா இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் பாகங்கள் பென்சில்வேனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலையே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என இராணுவம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே உள்ளூர் கிளர்ச்சி குழுக்களால் ஹெலிகொப்டர் சுட்டு வீ்ழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் உத்தரவிட்டுள்ள நிலையில், ஹெலிகொப்டர் தாழ்வாக பறந்ததாகவும், வெடித்து சிதறும் சத்தம் கேட்டதாகவும் பென்சில்வேனியா உள்ளூர்வாசிகள் தெரிவித்ததாக மேயர் Jesus Ospina குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக வடக்கு கொலம்பியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணி நடவடிக்கையின் போது ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதால் 16 பொலிஸார் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.