Breaking News

புதிய அரசியலமைப்பு அறிக்கை வடமாகாண சபை அவைத் தலைவரிடம் கையளிப்பு



புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி தவராசா எஸ்.தவராசாவினால் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் 20 பேர் கொண்ட புத்திஜீவிகள் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்தார்.

பிரதமரால் தெரிவு செய்யப்பட்ட குழுவில், சட்டம், அரசறிவியல், பொது நிர்வாகம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் அடங்கியிருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட இந்தக்குழுவானது, நாடு முழுவதும் பயணித்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பான மக்களின் கருத்துக்களைக் பெற்று, இவ்வறிக்கையினை மும்மொழிகளிலும் அச்சிட்டுள்ளது.

21 அத்தியாயங்களில் 340 பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள குறித்த அறிக்கையானது, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் என அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.