'அடுத்த ஆட்சிக்கான சாவி ஹெல உறுமயவிடம்'
ராஜபக்ஷர்கள் மீண்டும் இந்த நாட்டின் ஆட்சி பொறுப்புக்கு வரமுடியாது. அதற்கு ஹெல உறுமய இடம்கொடுக்காது. 2020ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாவதற்கான சாவி, ஹெல உறுமயவிடமே உள்ளது" என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சிகள். ஆனால் அவர்கள் இன்னும் ஜனநாயகமயமாகவேண்டும்." என அவர் கூறியுள்ளார். "மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் கதைத்து வேலையில்லை, அவர்கள் இன்னும் 40 வருடங்களுக்கு கதைத்துக் கொண்டே இருப்பார்கள்" என்றார். மாத்தளையில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.