கட்டுவன் ,குரும்பசிட்டி மக்கள் காணிகளை இன்று பார்வையிடலாம்
கட்டுவன்-குரும்பசிட்டியில் நேற்று விடுவிக்கப்ப ட்ட பகுதிகளை மக்கள் இன்று காலை 9 மணிக்குப் பின்னர் பார்வையிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரும்பசிட்டி-கட்டுவன் பிரதேசத்தில் 126 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாப்புத் தரப்பால் விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று முதல் தமது காணிகளைச் சென்று அடையாளப்படுத்தி காணிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபலாம். தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்பாகச் செல்லும் -அராலி வீதியின் ஊடாக இந்தப் பகுதிக்குள் மக்கள் நுழைய முடியும் .
அந்தந்தப் பகுதிக் கிராம அலுவலர்கள் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அவர்களிடம் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் மக்கள் தமது காணிகளுக்குச் செல்ல முடியும் என்று வலி.வடக்குப் பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவித்தன.