Breaking News

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தற்கொலை முயற்சி



பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும தற்கொலை முயற்சியின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்துகமை பகுதி பாடசாலை ஒன்றிலேயே பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று(வியாழக்கிழமை) தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது ஆதரவாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலையில் அனுமதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(புதன்கிழமை) அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில் தமது கோரிக்கைக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிவித்தே தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.