ஜனாதிபதி பங்கேற்ற நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் தீவிபத்து
அம்பாந்தோட்டையில் நேற்று மாலை ஜனாதிபதியால“ திறந்து வைக்கப்பட்ட சங்கிரி-லா நட்சத்திர விடுதியில் நடந்த கலை நிகழ்வுகளின் போது, தீவிபத்து ஏற்பட்டது.
விழாவில் வானவேடிக்கைக்காக வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், நடன அரங்கிற்கு மேலாக அமைக்கப்பட்டிருந்த வைக்கோலினால் ஆன கூரையில் தீப்பிடித்தது.
விடுதியைத் திறந்து வைத்த பின்னர், ஜனாதிபதி அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது, நேற்று மாலை 6.55 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. திறந்தவெளி அரங்கில் விருந்துபசார நிகழ்வு நடந்து கொண்டிருந்த, போது ஏற்பட்ட தீவிபத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை.