அது கட்சியல்ல, புதிய தேசிய சக்தி – மஹிந்த
புதிய கட்சியல்ல அது எனவும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவுள்ள அனைத்து சக்திகளையும் இணைக்கும் ஒரு புதிய தேசிய சக்தி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அணி உருவாக்குவது தொடர்பில் நேற்று மாலை கூட்டு எதிர்க் கட்சியுடன் கலந்துரையாடியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்த வற் வரி, அரச சொத்துக்களை விற்பனை செய்தல் போன்றவற்றுக்கு எதிராக அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் பழிவாங்கப்படுகினறனர். இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இந்த புதிய சக்தியை உருவாக்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.