Breaking News

முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம்! வவுனியாவில் விவசாயிகள் பேரணி

வடமாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு முதலமைச்சர் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக, முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம் என தெரிவித்து வவுனியாவில் விவசாயிகளினால் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.


வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடிய விவசாயிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன், மன்னார் வீதி வழியாக அமைதியான முறையில் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தனர்.

இதன்போது முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், மத்திய அரசே ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமையவிடு போன்ற வாசகங்களை பதாதைகளில் எழுத்தியவாறு போரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தப் போரணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திரராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த போரணியின் முறைவில் வவுனியா மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் தி. திரேஸ்குமாரிடம் பிரதமர் மற்றும் முதலமைச்சரிடம் கையளிப்பதற்கான மனுக்களும் கையளிக்கப்பட்டதுடன் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர்.