ரஜினி சொன்ன சொல் – சர்ச்சைக்கு முற்று புள்ளி!
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இவர் 14 வருடங்களுக்கு முன்பு நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக ரூ 1 கோடி தருவதாக கூறினார்.
அதை இன்னும் அவர் கொடுக்கவில்லை, இதனால் அவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் கூறினார்கள், அவர்கள் விவசாயிகள் தானா? இல்லை பப்ளிசிட்டி விரும்பிகள் விவசாயிகள் போர்வையில் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.
இந்நிலையில் ரஜினி எப்போதோ அந்த பணத்தை கொடுத்து விட்டாராம், பணம் வங்கியில் இருக்க, நதிநீர் இணைப்பு திட்டம் செயலுக்கு வந்தவுடன் அந்த பணம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் படி முன்பே செய்துவிட்டார்களாம்.