கூட்டமைப்புடன் பேசுவதற்கு அரசாங்கம் தயார்: கிரியெல்ல
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளமை வரவேற்றகத்தக்கது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படை வாதத்திற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது எனவும் மிதவாத கொள்கையுடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் எப்போதும் தயார் என சபை முதல்வரும், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயாராவது தொடர்பில் கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்று வினவியமைக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிரந்தராமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக கடந்த ஜனாதபதி தேர்தலில் தை்திரிபால சிறிசேனவுக்கு சுட்டமைப்பு தமிழ் மக்களும் ஆதரவு வழங்கி வெற்றி பெறச்செய்தனர் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இந்நாட்டு மக்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆணை வழங்கினார்கள். எனவே இனப்பிரச்சினைக்கு வெளிப்படைத்தன்மையான தீர்வை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலாகும்.
நாட்டின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் உள்ளன.அதற்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். அதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.