Breaking News

வடமாகாணத்தில் தனியார் போக்குவரத்துச்சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு

தனியார் போக்குவரத்துச் சேவைகள் வட மாகாண ரீதியில் பணிப் பணிஸ்கரிப்பை மேற்கொண்டு வருவதனால் தொழிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக  தெரிவித்தார். 

இந்த நிலையில் தனியார் போக்குவரத்து சங்கத்தினருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் பேரூந்திற்கு 60 வீதமும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின்னர் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தவிடயம், தொடர்பில் மத்திய அரசுடனும், மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு, இன்று திங்கட்கிழமை முதல் தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.