Breaking News

வடமாகாண ரீதியில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் நாளை பகிஸ்கரிப்பு



பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு தனியார் போக்குவரத்துச் சேவைகள் நாளை திங்கட்கிழமை முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் குறித்து வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.

தனியார் பேரூந்திற்கு 60 வீதமும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருகின்றது.

இந்த விடயம், தொடர்பாக மத்திய அரசுடனும், மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை.



இதனால் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் நாளை திங்கட்கிழமை தொடக்கம் தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.