விபத்தில் மாணவன் உயிரிழந்தமைக்கு "பட்டா வடி" ரக வாகனம் காரணமில்லை! (காணொளி)
யாழ். நகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழந்தமைக்கு "பட்டா வடி" ரக வாகனம் காரணமில்லை. வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த "ஹயஸ்" ரக வாகனமே காரணமாகும்.
"ஹயஸ்" வாகனத்தில் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனத்தை (துவிசக்கர வண்டியினை ) கவனிக்காது கதவினை திறந்தமையால் மாணவன் திறக்கப்பட்ட கதவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகும் காணொளி வெளியாகியுள்ளது.