காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களது நிலையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
இதற்கமைய போராட்டமானது வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.