Breaking News

காங்கேசன்துறை புகையிரத நிலையம் மக்கள் பாவனைக்கு!



உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த வலிகாமம் வடக்கு மற்றும், காங்கேசன்துறை ஆகிய பகுதி நிலங்கள் இன்று (சனிக்கிழமை) மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 201 ஏக்கர் நிலப்பரப்பும், காங்கேசன்துறை புகையிரத நிலைய பகுதியும் விடுவிக்கப்படவுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் குறித்த பகுதியினை கைப்பற்றிய இராணுவத்தினர், அங்கிருந்த மக்களை வெளியேற்றி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தினர். இவ்வாறு வெளியேறிய மக்கள் சுமார் 26 வருடங்களுக்கு பின்னர், தமது சொந்த இடங்களுக்கு செல்லவுள்ளனர்.

இந்நிகழ்வானது இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறவுள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மீள் குடியேற்றத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்து, காணி உரிமையாளர்களிடம் பத்திரங்களை வழங்கவுள்ளார்.