உள்ளூராட்சி சபை தேர்தல் அடுத்தவருட ஆரம்பத்தில் : ஜனாதிபதி
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவுபெறும் நிலையில் அடுத்தவருட ஆரம்பத்தில் இந்த தேர்தலை நடத்த உத்தேசித்திருப்பதாகவும் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடு முவதிலுமுள்ள 336 உள்ளூராட்சி சபைகளில் 313 சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதோடு விசேட ஆணையாளரின் கீழ் அவை கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றில் 33 மாநகர சபைகளின் ஆயுட்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
எனவே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எதிர்வரும் 29ஆம் திகதி பிரதமர், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதி தலைமையில் கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளனர்.
மேலும் அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும் என்பதை ஜனாதிபதி இந்த நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார்.