சங்குப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸார் ஒருவர் பலி
பூநகரி – சங்குப்பிட்டி பிரதேசத்தில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் லொறி ஒன்றும் மோதியதிலேயே, குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி மரணமாகியுள்ளார்.
உயிரிழந்தவர் 48 வயதான யோகநாதன் என்பவராவார். தற்போது, சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.