Breaking News

வலி வடக்கில் 201.3 ஏக்கர் காணிகள் கையளிப்பு

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது காணிகளில் 201.3 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளக்கையளிக்கப்பட்டுள்ளன.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கருணாசேன ஹெட்டியாராய்ச்சி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டு மக்களிடம் காணிகளை மீளக்கையளித்துள்ளனர்.

காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசத்தில் காணி கையளிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

வல்லை. தெல்லிப்பளை, அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்மித்த 63 ஏக்கர் காணிகளும், தெல்லிப்பளை 18 ஆவது சிங்க ரேஜின படைமுகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 201.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.