பிரித்தானியாவின் முடிவினால் இலங்கைக்கும் பாதிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகவுள்ளதையடுத்து, அந்த நாட்டுடன் புதிய பொருளாதார உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிரி்த்தானியாவில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்-
“ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகவுள்ள நிலையில், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் மூலம், சிறிலங்காவுக்கு கிடைத்த 40 வீத வரிச்சலுகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
இதனால் கூடிய விரைவில் பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும். இதன் வரைவு குறித்து சிறிலங்கா பிரதமர் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்துவார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரித்தானிய மக்கள் எடுத்துள்ள முடிவினால் ஏற்படும் உலகப் பொருளதார வீழ்ச்சியின் தாக்கம் சிறிலங்காவையும் பாதிக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.