"நாட்டிலிருந்து சட்டவிரோதமாக நிதி வெளியில் செல்வது குறித்து ஆராயப்பட வேண்டும்"
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக “நிதி” வெளியில் செல்வது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். நிதி மோசடிகளை தடுக்க வேண்டும். இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலம் அனுசரணையாக அமையும் என விசேட திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இன்று சபையில் தெரிவித்தார்.
நிதி மோசடிகளை விசாரிப்பதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதாது. எனவே புதிய சட்டங்கள் தேவையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே விசேட திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம இவ்வாறு தெரிவித்தார்.