தொண்டமானின் கனவைக் கலைத்தார் ஜனாதிபதி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையையும் மேலும் அதிகரிக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது இருக்கின்ற அமைச்சர்களின் எண்ணிக்கையை விட ஒருவரேனும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற முடிவில் அரசாங்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்போவதாக வெளியாக தகவல்களை மறுத்துள்ள ஜனாதிபதி, ஆறுமுகன் தொண்டமான் தன்னை சந்தித்து இதுதொடர்பில் எவ்விதப் பேச்சும் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.