தகவல் அறியும் சட்டமூலம்: இன்று வாக்கெடுப்பு
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட, தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் குறித்த வாக்கெடுப்பு வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகரின் தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தகவலறியும் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதமும் இடம்பெறவுள்ளளது.
இந்த வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து தகவல் அறியும் சட்டமூலம் குறித்த வாக்கெடுப்பு இன்றைய நடைபெறுவதுடன், அது குறித்த இறுதி தீர்மானமும் எட்டப்படவுள்ளது. மேலும் தகவல் அறியும் குழு ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடத்தப்படும் நேற்று மற்றும் இன்று ஆகிய தினங்களிலும், ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என சகலரும் சபையில் பிரசன்னமாக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.