Breaking News

வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

வவுனியா தீருநாவல்குளத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காணமல் போன நபர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மேசன் வேலைக்காக சென்ற தீருநாவல்குளத்தை சேர்ந்த பாக்கியநாதன் ஜஸ்டின் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக மனைவியினால் வவுனியா பொலிஸில் புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், குடியிருப்பில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலமொன்றின் கீழ் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. 

இதனை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச் சடலம் காணாமல்போன பாக்கியநாதன் ஜஸ்டினின் என கண்டறிந்தனர். இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.