அவன்காட் நிறுவனத்தின் கப்பல் தலைவன் கைது
காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலின் தலவனான உக்ரைன் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத ஆயுத போக்குவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த உக்ரைன் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ;ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கடல் சட்டங்களையும் உள்நாட்டு ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டங்களையும் மீறி சர்ச்சைக்குரிய அவன்கார்ட் நிறுவனம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, குறித்த நிறுவனம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டது.
இரகசிய ஆயுத விற்பனை தொடர்பாக அவன்கார்ட் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.